தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய தொகையில் வருமானவரி நிலுவையை வசூலிக்க தடை கோரியும், வேதா இல்லத்தின் அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும்; சட்டப்பூர்வ வாரிசான என்னையும் ஜெ.தீபக்கையும் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெ.தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.