சென்னையில் கொரோனா உள்ளவரிடம் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும்; மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் திட்டம் ரத்து என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
முன்பு இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்படும் , மேலும் வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவர்,
இதனையடுத்து கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்து வீட்டிற்கு அனுப்பப்படுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நெருக்கும் அதிகமாக உள்ள தண்டையர்பேட்டை, ராயபுரத்தில் கொரோனா பரவல் இருக்கிறது.
இதனையடுத்து கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்’ கொரோனா தொற்றின் புரிதல்கள் பற்றி தவறான தகவல்கள் பரவுகிறது.
சென்னையில் கொரோனா உள்ளவரிடம் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும், வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காமல் வெளியே வருபவர்களை மட்டுமே முகாமிற்கு அழைத்து செல்லப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் பலர் கொரோனா தொற்று முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர், இதனை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.