நடிகர் ரஜினிகாந்துடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு

நேற்று தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த நிலையில் இன்று மற்றுமொரு இஸ்லாமிய அமைப்பினர் சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் நேரில் சந்தித்து பேசினார்.

இன்று சிஏஏ குறித்து பேச இஸ்லாமிய மத குருமார்கள் ரஜினியை சந்திக்க இருக்கிறார்கள். 

இந்த சந்திப்பில் சிஏஏவின் பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்திடம் இஸ்லாமிய குருமார்கள் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே