ரஜினி நாடகமாடுகிறாரா ? – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பதில்..!!

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்யதலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் திருச்சியில் நடத்த பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது. அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.300 , ஆண் குழந்தை பிறந்தால் ரூ.500 லஞ்சம் பெறுகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது. குழந்தை பிறப்பு முதல் குடும்ப அட்டை, பட்டா ,சொத்துவரி, மின் இணைப்பு வரை லஞ்சம்” என்றார்.

இணையதள வசதியுடன் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணிணி அரசு சார்பில் வழங்கப்படும்.

பேப்பர் இல்லா மின்னணு இல்லங்கள், மின்னணு அலுவலகங்களை மக்கள் நீதி மையம் உருவாக்கும். கணிப்பொறி என்பது இலவசம் அல்ல. அது அரசுடைய முதலீடு.

அதை அரசு கொடுக்கும். ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு தலைநகர் ஆக்கப்படும். அந்தந்த தொழில் சார்ந்த துறை சார்ந்த மாவட்டங்கள் தலைநகராக்க மக்கள் நீதி மையத்தால் முடியும்.

எம்ஜிஆரை மட்டுமே முன்னெடுக்கின்றன. நீங்கள் கலைஞரை ஏன் முன்னெடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த கமல் இங்கு தேவைப்படுகிறதோ?

அதை நான் முன்னெடுப்பேன். இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடவேண்டும்.

மூன்றாவது அணி அமைந்தால் கமலஹாசன் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

மக்கள் நீதி மையம் தலைமையில் 3-ஆவது அணி அமையும். மதவாதம் இல்லை என்று சொல்லவே முடியாது.

விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். அது நம்முடைய நாட்டில் நடைபெறக் கூடாது என்பதை மக்கள் நீதி மையம் நினைக்கிறது.

அத்தனை லட்சம் விவசாயிகளை பார்க்க முடியாத மோடியால் கமல்ஹாசன் நான் ஒருவன் போய் எப்படி சாதித்துவிட முடியும். டார்ச் லைட்டு எங்களுக்கு உரியது தான் தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம் என்றார்.

கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினி என்ற கேள்விக்கு, 40 ஆண்டுகால நண்பர் ரஜினிக்கு உடல் நலம் தான் முக்கியம் .

உடல் நலம் சரியான பின் ரஜினி தனது பணிகளை தொடங்குவார். ரஜினிகாந்தின் உடல் நலத்தின் அடிப்படையில் யுகமான தகவல்களை வெளியிட கூடாது.

ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் 3வது அணியாக மாறிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே