சட்டமன்றத் தேர்தலை நடத்தும்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா..?? – உச்சநீதிமன்றம் கேள்வி..!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா?

கடந்த 4-ஆம் தேதி நகர்ப்புற தேர்தலை நடத்த, 7 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று, தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் முக்கூல் ரோஹத்கி ஆஜரானார்.

இந்நிலையில், இந்த மனுவை படித்து பார்த்த தலைமை நீதிபதி, ஒருநாள் கூட உங்களுக்கு இதற்கான அவகாசத்தை வழங்க முடியாது. உங்களால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த முடிகிறது. தேர்தலுக்கான அரசியல் கூட்டங்களை உங்களால் நடத்த முடிகிறது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமல்படுத்துவதில் நீங்கள் தயக்கம் காட்டுகிறீர்கள் என்றும் கூறினார்.

அதனை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் முக்கூல் ரோஹத்கி, கோரிக்கை மனுவை படித்துப்பார்க்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும், தாங்கள் கூறியபடி, 7 மாதங்கள் அவகாசம் கொடுக்காவிட்டாலும், 3 முதல் 4 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, எதற்காக கால அவகாசம் கேட்கிறீர்கள் என்பது தொடர்பாக பிராமண பாத்திரத்தை, 2 நாட்களில் மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே