மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம் அறிமுகம் – செல்லூர் ராஜூ

மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசர கடன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோவிட்-19 சிறப்பு கடனுதவித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஊரடங்கின்போது கூட்டுறவுத் துறையின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் அவசர கடன் தேவையை பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு கடன் உதவித் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் ஒரு குழுவிற்கு ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே