கொரொனாவால் INFOSYS நிர்வாக நடைமுறை மாற்றங்கள்…

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸால் எரிசக்தி, எண்ணெய் நிறுவங்கள் உள்ளிட்ட தொழில்துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பால் ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதுடன், புதிதாக பணியாளர் சேர்க்கையையும் நிறுத்தப்படுவதாக இன்போசிஸ் நிறுவன தலைமை நிர்வாகி நிலஞ்சன் ராய் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஊழியர்களின் பணி நீக்கம் செய்யப்போவதில்லை என்றும் 2021ம் ஆண்டில் புதிதாக 35 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப அழைக்க விருப்பமில்லை என்றும் நிலஞ்சன் ராய் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே