வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் எஞ்சின்களை வழங்கியது இந்தியா

வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியது.

இதையொட்டி டில்லியில் நடந்த காணொளிகாட்சியில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சர் மற்றும் அந்நாட்டு ரயில்வே அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்உதவி திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் 17 ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா முன்வந்துள்ளது.

பாலங்கள், சிக்னல் அமைப்புகள், அகலரயில் பாதை டீசல் என்ஜின்கள் உள்ளிட்ட 9 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. .

இதன் ஒரு கட்டமாக மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கெடே என்ற ரயில்நிலையத்திலிருந்து 10 டீசல் ரயில் என்ஜின்களும் ஒன்றன்பின் ஒன்றாக வங்கதேசத்தில் உள்ள தர்ஷனா ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு டீசல் ரயில் என்ஜினும் 28 வருடங்கள் ஓடக் கூடியது. 

அவை WDM-3D வகை என்ஜின், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என்ஜின், 3,300 ஹார்ஸ் பவர் என்ஜின்கள், மணிக்கு 120 கி.மீ., வேகம் வரை ஓடக்கூடியவை.

இந்த ரயில் என்ஜின்கள் மூலம் இந்திய மற்றும் வங்கதேசத்திற்கு இடையே ரயில் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே