பயணிகளின் போதிய ஆதரவு இல்லாததால் வண்டி எண் 02613/02614 சென்னை – மதுரை இடையேயான தேஜாஸ் சிறப்பு ரயில் 04.01.2020 முதல் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரயில் கால அட்டவணை மாற்றங்கள் 25.12.2020 முதல் வண்டி எண் 06012 கன்னியாகுமரி – டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில் கோவில்பட்டியில் இருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கும்; சாத்தூரில் இருந்து இரவு 10.50 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கும் புறப்படும்.

27.12.2020 முதல் சில ரயில்களின் கால அட்டவணைகள் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி வண்டி எண் 02635 சென்னை – மதுரை வைகை சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 08.05 மணிக்கு பதிலாக இரவு 07.55 மணிக்கும்; சோழவந்தானில் இருந்து இரவு 08.35 மணிக்கு பதிலாக இரவு 08.30 மணிக்கும் புறப்படும்.

வண்டி எண் 02661 சென்னை – செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 02632 திருநெல்வேலி – சென்னை நெல்லை சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இரவு 10.25 மணிக்கு பதிலாக இரவு 10.15 மணிக்கும்; சோழவந்தானில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதிலாக இரவு 10.36 மணிக்கும் புறப்படும்.

வண்டி எண் 02637 சென்னை – மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 04.10 மணிக்கு பதிலாக அதிகாலை 04.05 மணிக்கும்; அம்பாத்துரையிலிருந்து அதிகாலை 04.23 மணிக்கு பதிலாக அதிகாலை 04.18 மணிக்கும்; கொடைக்கானல் ரோட்டில் இருந்து அதிகாலை 04.35 மணிக்கு பதிலாக அதிகாலை 04.30 மணிக்கும் புறப்படும்.

வண்டி எண் 02693 சென்னை தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில் விருதுநகரிலிருந்து அதிகாலை 03.57 மணிக்கு பதிலாக அதிகாலை 03.55 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 02634 கன்னியாகுமரி சென்னை சிறப்பு ரயில் மதுரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு பதிலாக இரவு 10.00 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் 06344 மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் பழனியில் இருந்து மாலை 06.40 மணிக்கு பதிலாக மாலை 06.30 மணிக்கும்; உடுமலைப்பேட்டையில் இருந்து இரவு 07.15 மணிக்கு பதிலாக இரவு 07.05 மணிக்கும் புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே