முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் திறந்த நிலையில், வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் வந்தனர்.

இதனால், வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்கள் மாநில அரசிடம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளூர் வாசிகள் பலர் முகக்கவசம் அணியவில்லை என தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

மேலும், முகக்கவசம் இன்றி செல்பவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே