முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவர்..!!

முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவலைக் கட்டுப் படுத்த முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடை பிடிப்பது போன்றவற்றில் சமரசம் செய்ய கூடாது.

விமான சேவை யில் பயணிகளுக்கு சில குறிப் பிட்ட ஒழுக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அவற்றை மீறும்போது அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்க சம்பந்தப்பட்ட ஏர்லைன் நிறுவனத்துக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு ஒழுக்க விதிமுறைகளுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு விமானப் பயணம் செய்ய தடை செய்யப்படுவார்கள்.

வார்த்தை தாக்குதலுக்கு 3 மாதம், வன்முறை தாக்குதலுக்கு 6 மாதம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் செயல்களுக்கு 2 வருடம் அல்லது அதற்கும் மேல் விமானத்தில் பயணம் தடை செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.

தற்போது கரோனா பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில் விமானத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வலுயுறுத்தப்பட்டுள்ளது.

போதுமான எச்சரிக்கைகள் செய்த பிறகும் விமானத்தில் முகக் கவசம் அணிய மறுத்தால், அவர்கள் விமானத்தில் இறந்து இறக்கிவிடப்படுவார்கள்.

மேலும் விமானத்தில் பயணிக்க தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு டிஜிசிஏ கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே