ஆக்ஸிஜன் சப்ளையை தடுத்தால் தூக்கில் போடுவோம் – நீதிபதிகள் ஆவேசம்..!!

ஆக்ஸிஜன் வழங்க தடையாக இருப்பவரை யார் என்று சொல்லுங்கள் அவரை தூக்கில் போடுவோம் என நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் கொரனோவால் இந்தியாவில் பல்வேறு மாநில மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். டில்லி, மஹாராஷ்ட்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தனர். கொரோனாவின் கடந்த அலையை விட இந்த அலையில் ஆக்சிஜன் கூடுதல் தேவைப்படுகிறது. மொத்தம் நோயாளிகளில் 54.5 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.டில்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால் வேறு மாநிலத்தை நோக்கி கை ஏந்தும் நிலையில் உள்ளது. இதனால் முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசின் உதவியை கேட்டு நிற்கிறார்.இதற்கிடையில் டில்லியில் ஆக்சிஜன் தேவை தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கலானது. இந்த மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

டில்லி அரசு தரப்பில் ” 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 297 மெட்ரிக் டன் மட்டுமே கிடைத்துள்ளது.

இதே நிலை நீடித்தால் பல உயிர்களை இழக்க நேரிடும்” என்றும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது ஆவேசமுற்ற நீதபதிகள்; ” ஆக்சிஜன் வழங்க தடையாக இருப்பவரை யார் என்று சொல்லுங்கள் அவரை தூக்கில் போடுவோம் என்றனர். யாரையும் தப்பிக்க விட மாட்டோம்.

மேலும் தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம் ” – இவ்வாறு நீதபதிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே