திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் ஏற்றுக் கொள்வேன் – வேல்முருகன்

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெறுவதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாகவும் அந்த கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட சிறு கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை அளித்த பேட்டியின்போது, இந்த கூட்டணியை உறுதி செய்தார்.

அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக வரவேண்டும்.

தொடர்ந்து, பாஜக அரசும், அதிமுக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மக்கள் விரோத திட்டங்களையும், மக்கள் விரோத சட்டங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

இதனால், அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும்.

பாஜக தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் அரசியல் அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்று எங்களுக்கு உரிய இடங்களை ஒதுக்குமாறு திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் தெரிவித்துள்ளேன்.

திமுக எத்தனை தொகுதி கொடுத்தாலும் மகிழ்ச்சி உடன் ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி 2 தொகுதிகள் கேட்கும் நிலையில் திமுக ஒரு தொகுதி ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே