“நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்”…விஜய் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், ரசிகன் படத்திலிருந்து இளைய தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வந்தார். இதையடுத்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகனாக திகழ்ந்த அவர் தற்போது தளபதி என்ற அடைமொழியுடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அதேவேளையில் திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினையும் தொண்டர்கள் தளபதியார் என்றே அழைத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் 46-வது பிறந்தநாளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தி பதிவிட்டிருக்கிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது :-

“நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay

— Udhay (@Udhaystalin) June 22, 2020

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே