24 மணி நேரமும் தாம்பத்தியத்துக்கு வற்புறுத்தியதால் கணவனை கொன்றேன் – மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

அந்தியூரில் தொடர்ந்து உறவுக்காக தொந்தரவு கொடுத்து வந்த கணவனை உணவில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் 5 மாத கர்ப்பிணியான மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள உள்ள காளியண்ணன்கவுண்டர் தோட்டப்பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்தவர் நந்தகுமார்.

இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தும், அந்தியூரிலுள்ள தனியார் மாவு மில்லில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் பவானி பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

மைதிலிக்கு ஏற்கனவே ஒரு முறை திருமணமாகி, தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தாயார் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையே மைதிலிக்கு, இரண்டாவதாக நந்தகுமாருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நந்தகுமாருக்கு கடந்த 31ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில், ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்ததையடுத்து ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, மருத்துவர்கள் நந்தகுமாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக தெரிவித்ததையடுத்து, மாஜிஸ்ட்ரேட் வரவழைக்கப்பட்டு நந்தகுமாரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. மரண வாக்குமூலம் கொடுத்த நந்தகுமார் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நந்த குமார் அளித்த வாக்குமூலத்தில், கடந்த மாதம் 28 -ம் தேதி அன்று உணவருந்துகையில் உணவு கசப்பது போல் இருந்தது.

அதற்குப் பின்னர்தான் தீராத வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனது மனைவியின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது என தெரிவித்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர், மைதிலியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் உண்மையை கூற மறுத்த மைதிலி, ஒரு கட்டத்தில், கணவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்ததாகவும், அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த சில நாட்களாகவே தனது கணவர் நந்தகுமார், இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் தான் கர்ப்பம் தரித்ததாகவும் கூறினார்.

அப்போதும் விடாத கணவர், கர்ப்பிணியென்றும் கூட பாராமல் மீண்டும் மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் உணவில் விஷம் வைத்தேன் என மைதிலி தெரிவித்தார்.

இதனையடுத்து மைதிலியைக் கொலை வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையினர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கணவரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல், விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் 5 மாத கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே