நான் உன்னை தேர்வு செய்யவில்லை: ராபின் உத்தப்பாவிடம் கூறிய சிஎஸ்கே கேப்டன் தோனி

IPL 2021 CSK Dhoni | ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டவுடன் தோனி அவரிடம் ஒரு உண்மையை உடைத்தார். அதைப்பற்றி ராபின் உத்தப்பா கூறியதை இங்கே பதிவிடுகிறோம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஐபிஎல் 2021 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்ட ராபின் உத்தப்பாவிடம் தோனி ரகசியத்தை உடைத்தார்.

ராபின் உத்தப்பாவுக்கும் தோனிக்கும் இடையிலான நட்பு நமக்கு தெரிந்ததே. கர்நாடகாவில் உள்ள ராபின் உத்தப்பாவின் பங்களாவுக்கு தோனி வந்து தங்கி இருவரும் நன்றாகப் பழகியதெல்லாம் அனைவரும் அறிந்த செய்தி.

இந்நிலையில் தோனி சொல்லித்தான் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்ற பேச்சு எழும் என்பதை தெரிந்து கொண்ட தோனி, ராபின் உத்தப்பாவிடம் உரையாடிய போது தான் தேர்வு செய்யவில்லை அணி தலைமைக்குழு, நிர்வாகக் குழுவின் முடிவு அது என்று தோனி தன்னிடம் கூறியதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராபின் உத்தப்பா கூறியதாவது:

தோனி ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது, அவர் என்னிடம், ‘நான் உன்னைத் தேர்வு செய்யவில்லை என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். இது அணி தலைமை நிர்வாகக் குழு, அதாவது பயிற்சியாளர்கள், மற்றும் சி.இ.ஓ. எடுத்த முடிவு என்பதை உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன்னிடம் கூறியதாக உத்தப்பா ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ராபின் உத்தப்பாவிடம் தோனி கூறியதாக ராபின் உத்தப்பா தெரிவிக்கும் போது, “யாரும் நான் தான் உன்னை சிஎஸ்கேவில் தேர்வு செய்தேன் என்று நினைத்துவிடக் கூடாது. நீ உன்னுடைய திறமையினால்தான் இங்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம். என்னிடம் விஷயம் வந்த போது மற்றவர்கள் இடம் கேட்டு ஆலோசித்து முடிவெடுங்கள் என்றுதான் கூறினேன்.

ஏனென்றால் தோனியினால்தான் ராபின் உத்தப்பா அணிக்குள் வந்தார் என்று யாரும் நினைத்து விடக்கூடாது, என தோனி என்னிடம் கூறினார், அவரிடம் பிடித்ததே இந்த நேர்மைதான்” என்றார் உத்தப்பா.

விஜய் ஹசாரே டிராபியில் ராபின் உத்தப்பா 6 மேட்ச்களில் 377 ரன்கல் எடுத்தார் ஸ்ட்ரைக் ரேட் 131 என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே