தூங்கி எழுவதற்கும் காலை உணவை சாப்பிடுவதற்கும் எவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும்?

காலை உணவு என்பது. உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய விஷயம் ஆகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. எனவே காலை உணவை எப்போது சாப்பிட வேண்டும். எப்படி சரியான நேரத்தில் உடம்பிற்கான எனர்ஜியை பெறலாம்.
நம்மில் பெரும்பாலனோர் காலை உணவை சரியாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு சிலர் காலை உணவை வெகு நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான காலை உணவு நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. காலையில் உங்க நாளை சுறுசுறுப்பாக நடத்திச் செல்ல காலை உணவு என்பது அவசியம். அதை எக்காரணத்தைக் கொண்டும் தவற விடக்கூடாது. அதுதான் அன்றைய நாள் முழுமைக்குமான ஆற்றலை நமக்கு வழங்கும்.

​சிறந்த காலை உணவு
ஒரு சிறந்த காலை உணவைப் பற்றி பேசுகையில் கார்ப்ஸ், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் கலவையாக உள்ளது. ஆனால் காலை உணவை சாப்பிடுவதற்கென்று சரியான நேரம் எது என்று யாருக்கும் தெரிவதில்லை. காலை உணவு உங்க உடலுக்கு எரிபொருளை தர உதவுகிறது. காலையில் எழுந்ததும் உங்க உடலுக்கு தேவையான ஆற்றலை பெற காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

காலை உணவை எப்பொழுது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

​காலை உணவின் அவசியம்
எழுந்தவுடன் உங்க காலை உணவை எவ்வளவு விரைவில் சாப்பிட வேண்டும்

உங்க காலை உணவை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். எழுந்த பின் காலை உணவை சாப்பிடுவது உங்க வளர்ச்சிதை மாற்றத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தாலோ இல்லை காலையில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் வேலை செய்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பு வாழைப்பழம், வெண்ணெய் போன்ற சிற்றுண்டி உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இருப்பினும் இது உங்க வொர்க் அவுட்டை பாதிக்கும் என்றால் வெறும் வயிற்றில் செய்யுங்கள். வியர்வை அமர்வுக்கு பிறகு நீங்கள் காலை உணவை உட்கொள்ளலாம்.

​எடை இழக்க சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்
உடல் எடையை குறைக்க சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் எடை இழப்பு இலக்குகளை அடைவது உங்களுக்கு கடினமாக இருக்கும்.

நீங்கள் இடைவிடாத உண்ணாவிரதத்தை பின்பற்றினாலும் உங்க இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடையிலான இடைவெளி 12-14 மணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. இதை விட அதிகமான நேரத்திற்கு மீறுவது உங்க எடை இழப்பு பயணத்திற்கு நல்லதல்ல.

​செரிமானம் அடைதல்
உங்கள் இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணி நேரம் உண்ணாவிரதம் உணவின் முழுமையான செரிமானத்திற்கு சிறந்தது. இந்த நேர இடைவெளியை கொண்டிருப்பது உங்க தூக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் இதயத்தின் தாளத்தை பராமரிக்க உதவுகிறது.

முறையான இடைவெளிகளோடு சரியான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தான் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும். சீரண சக்தி மேம்படும்.

​உணவு நேர அட்டவணை
உங்க எல்லா உணவையும் சாப்பிட இதுவே சரியான நேரம்

எல்லா நேரங்களிலும் உணவை சாப்பிட சரியான நேரம்

காலை உணவு :காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை

காலை சிற்றுண்டி : காலை உணவுக்கு 2-4 மணி நேரம் கழித்து

மதிய உணவு : பிற்பகல் 3 மணிக்கு முன்

பிற்பகல் சிற்றுண்டி : மதிய உணவுக்கு 2-4 மணி நேரம் கழித்து

இரவு உணவு :மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உங்க இரவு உணவை உண்ணுங்கள்.

சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்வது உங்க சாதாரண உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இது நம் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. பகலில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே