முக்கிய குறிப்பு : நீங்கள் வாசிக்க போகும் இந்த கட்டுரை பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பகவத் ருத் மோகன் சிங் என்பவரால் ஹிந்தியில் எழுதப்பட்டது. இந்த கட்டுரையை தமிழில் நாம் மொழி பெயர்ப்பு செய்துள்ளோம்.

முகலாய பேரரசின் ஆறாவது மன்னர் ஒளரங்கசீப். ஒளரங்கசீப்பின் வாழ்க்கை வரலாற்றில் அவரது குழந்தைப்பருவம், வாழ்க்கை, சாதனைகள், படைப்புகள் என அனைத்தையும் காலவாரியாக வரிசையாக பார்ப்போம்.

சுருக்கமான குறிப்புகள்:

 • பிறந்த நாள்: 04 நவம்பர் 1618
 • தேசியம்: இந்தியன்
 • பதவி: முகலாய பேரரசின் அரசர்
 • அபுல் முசாபர் முஹி உத்-தின் முகம்மது ஒளரங்கசீப் என்றும் அழைக்கப்படுகிறார்.
 • பிறந்த இடம்: தஹோத்

குடும்பம்:

 • மனைவிகள்/ முன்னாள் மனைவிகள்: ஒளரங்காபாடி மஹால், தில்ராஸ் பானு பேகம், ஹிரா பாய் ஜைனாபாதி மஹால், நவாப் ராஜ் பாய் பேகம், உதய்புரி மஹால்
 • தந்தை: ஷாஜகான்
 • தாய்: மும்தாஸ் மஹால்
 • உடன் பிறந்தவர்கள்: தாரா ஷிகோ, முராத் பக்ஷ், ரோஷனாரா பேகம், ஷா சுஜா.
 • குழந்தைகள்: பதர் உன் நிசா, பகதூர் ஷா நான், மெஹர் உன் நிசா, முஹம்மது அசாம் ஷா, முஹம்மது காம் பக்ஷ், சுல்தான் முஹம்மது அக்பர், ஜபாத் உன் நிசா, ஜெப் உன் நிசா, ஜினாத் உன் நிசா, ஜுபாத் அன் நிசா.
 • இறந்த நாள்: 03 மார்ச் 1707
 • இறந்த இடம்: அகமது நகர்

ஒளரங்கசீப் இந்திய முகலாய பேரரசின் ஆறாவது மன்னர் ஆவார். இவரது ஆட்சி காலம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் ஆகும்.(1658 முதல் 1707 வரை) இவர் தனது ஆட்சி காலத்தில் பல்வேறு நாடுகளில் வெற்றிக்கண்டு முகலாய பேரரசின் பரப்பளவை அதிகப்படுத்தினார்.

அவரது ஆட்சிக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யம் 3.2 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. ஷாஜகானனின் மூன்றாவது மகனான ஒளரங்கசீப் தனது 18 வயதிலேயே டெக்கான் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

மேலும் ராஜ்ய ராணுவ பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதன் மூலம் தனது தந்தைக்கு ஆட்சி செய்வதில் உதவியாக இருந்தார். ஆனால் மிகவும் கொடூரமான மனிதனாக அறியப்படுகிறார். அதிகாரத்தின் மீது இவர் அதிக ஆசைக்கொண்டிருந்தார்.

அதற்காக நோய்வாய்ப்பட்டிருந்த தனது தந்தையை சிறையில் அடைத்தார். பின்பு தனது சொந்த சகோதர்களை தோற்கடித்து தானே ராஜ்யத்தின் பேரரசாக முடிசூட்டிக்கொண்டவர் தான் ஒளரங்கசீப். ஆலம்கீர் (உலகத்தை வென்றவர்) என்ற பட்டத்தை சூடிக்கொண்டார்.

சர்வாதிகார ஆட்சி

அவரது கொடூரமான சர்வதிகார ஆட்சி மக்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்தியது. இதனால் மராட்டியர்கள், ஜாட்கள், சீக்கியர்கள் மற்றும் ராஜப்புத்திரர்கள் அவருக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்த கிளர்ச்சியை தடுக்க போதுமான ராணுவம் ஒளரங்கசீப்பீடம் இருந்தாலும் தொடர்ந்து நடந்த இந்த போரால் அவரின் கஜானா பொருட்கள் கணிசமாக குறைந்தன. இராணுவ வீரர்களும் தொடர் தாக்குதலால் சோர்வுற்றனர்.

அவரது மரணத்திற்கு பிறகு சரிவை நோக்கி சென்ற முகலாய பேரரசு இறுதியாக 18 ஆம் நூற்றாண்டில் மொத்தமாக வீழ்ந்தது.

குழந்தை பருவமும் ஆரம்ப வாழ்க்கையும்

அபுல் முசாபர் முஹி உத்-தின் முகம்மது ஒளரங்கசீப் 1618 நவம்பர் 4 ஆம் தேதி குஜராத்தில் உள்ள தஹோத் என்னும் இடத்தில் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மஹால் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

அவர் பிறந்த நேரத்தில் ஷாஜகான் குஜராத்தின் ஆளுநராக இருந்தார். 1628 இல் அவர் அதிகாரபூர்வமான முகலாய பேரரசராக அறிவிக்கப்பட்டார். ஒளரங்கசீப் சிறுவயது முதலே தைரியமான மனிதராக இருந்தார். 1636 இல் தனது 18 வது வயதிலேயே டெக்கான் மாகாண வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

ஆளுநர் பதவி

ஷாஜகான் பாக்லானாவில் உள்ள சிறிய ராஜபுத்திர பகுதியை முகலாய பேரரசுடன் இணைக்கும் பணியை ஒளரங்கசீப்பிடம் கொடுத்தார். பின்பு ஒளரங்கசீப்பின் துணிச்சலையும் வீரத்தையும் கண்டு ஈர்ப்புக்கொண்ட ஷாஜகான் முல்தான் மற்றும் சிந்த் ஆகிய பகுதியின் ஆளுநரகாவும் ஒளரங்கசீப்பை நியமித்தார்.

இதனால் தந்தையின் ஆட்சி காலத்தில் பல முக்கிய பதவிகளை ஒளரங்கசீப் வகித்தார். அனைத்து துறையிலும் தான் தனியே தெரியும் அளவு தன் பணிகளை சிறப்பாக செய்து வந்தார் ஒளரங்கசீப்.

நாட்கள் செல்ல செல்ல சிம்மாசனத்தை அடையும் ஆசை இவருக்கு அதிகமானது. இதனால் அவரது மூத்த சகோதரர் தாரோ சிகோவுடன் இவருக்கு போட்டியானது. அவர் சிம்மாசனத்தின் வாரிசாக அவரது தந்தையால் அறிவிக்கபட்டார்.

கையகப்படுத்துதல் மற்றும் ஆட்சி

பேரரசர் ஷாஜகான் 1657 இல் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இதனால் தனது மூத்த சகோதரர் தாரோ சிகோ பேரரசை கைபற்றக்கூடும் என ஒளரங்கசீப் பயந்தார்.

இதனால் இந்த சகோதர்களிடையே கடுமையான போர் தொடங்கியது. ஆனால் இறுதியில் ஒளரங்கசீப்பே அந்த போரில் வென்றார். அவர் ஷாஜகானை ஆக்ராவில் சிறை வைத்தார். மேலும் ஆட்சியை பற்றும் வெறியில் தனது சகோதரர்களையும் அவர்கள் பிள்ளைகளையும் தன் சொந்த பிள்ளையையும் கூட ஒளரங்கசீப் கொன்றார்.

இப்படியாக அனைத்து போட்டிகளையும் கொன்றப்பின் அவர் ஒருவரே மொத்த முகலாய பேரரசின் பேரரசர் ஆனார். டெல்லி செங்கோட்டையில் 1659 ஜூன் 13 அன்று அவருக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட்டது.

மதப்பிரிவினை

மரபு வழி சன்னி முஸ்லீமான ஒளரங்கசீப் தனது முன்னோர்களின் மதத்தை வளர்க்க எண்ணினார். இதனால் தேசத்தை மொத்தமாக இஸ்லாமிய பேரரசாக மாற்ற எண்ணினார். இதனால் இந்து பண்டிகைகளுக்கு தடை விதித்தார்.

ஒரு ஐரோப்பிய தொழிற்சாலைக்கு அருகே அப்போது கிருஸ்துவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒளரங்கசீப் அந்த குடியேற்றங்களை இடித்து தரைமட்டமாக்கினார்.

சீக்கிய தலைவரான குரு தேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால் அவரை தூக்கில் ஏற்றி கொன்றார்.

வரிக் கொடுமை

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அதிகமான வரிகளை அமல்படுத்தினார். அரசாங்க வேலைகளில் இருந்து இந்துக்களை நீக்கம் செய்தார். இவர் காலத்தில் பலர் இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தப்பட்டனர். அதற்கு ஒப்புக்கொள்ளாதவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது.

தனது பேரரசை விரிவுப்படுத்துவதில் அவர் உறுதியாக இருந்தார். ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் முகலாய அரசு தொடர்ந்து போர்களில் ஈடுப்பட்டது. அஹ்மத் நகர், சுல்தானேட்டை தனது நாட்டோடு இணைத்தார் அது மட்டுமின்றி பிஜாபூரில் உள்ள ஷாஜிஸ் என்னும் பகுதியையும், கோல் கொண்டாவில் உள்ள குத்பாஹிஸையும் கைப்பற்றினார்.

சாம்ராஜ்யம்

அவரது சர்வதிகார ஆட்சியில் தெற்கில் தனது சாம்ராஜ்யத்தை தஞ்சை, மற்றும் திரிச்சினோபொலி (திருச்சி) வரை விரிவுப்படுத்தி இருந்தார். ஒளரங்கசீப் சர்வதிகார ஆட்சி செலுத்தியவர் அவருடைய குடிமக்களே அவரை வெறுத்தனர். அவரது ஆட்சியின் போது இந்தியாவில் பல கிளர்ச்சிகள் கிளம்பின. அந்த கிளர்ச்சிகள் முகலாய கருவூலத்தையும், இராணுவத்தையும் பலவீனப்படுத்தின. இதனால் பேரரசு பலவீனமானது.

ஒளரங்கசீப்பின் மரணத்தை தொடர்ந்து சிறிது காலத்தில் முகலாய பேரரசும் இல்லாமல் போனது.

முக்கிய போர்கள்

ஆக்கிரமிப்பு சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்ட ஒளரங்கசீப் அவரது காலத்தில் அதிகமாக போர்களை தொடுத்தார். அதில் மிக முக்கியமானது 1680ல் தொடங்கி 1707 வரை முகலாயர்களுக்கும் மராத்தியர்களுக்குமிடையே நடந்த முகலாய – மராத்தா போர் ஆகும்.

ஒளரங்கசீப் பிஜாப்பூரில் நிறுவப்பட்ட மராத்திய உறைவிடத்தின் மேல் படையெடுத்தபோதுதான் மராத்திய இஸ்லாமிய போர் தொடங்கியது. ஒளரங்கசீப் மற்றும் மராட்டிய சிவாஜியின் வாழ்நாளில் இந்த போர் முக்கியமான போராகும்.

முகலாய சாம்ராஜ்யத்தின் வளங்களை குறைத்ததில் இந்த போருக்கு முக்கிய பங்குண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை

ஒளரங்கசீப் பலமுறை பல பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அவரது முதல் மனைவி தில்ராஸ் பானு பேகம் ஆவார். பேகம் நவாப் பாய், அவுரங்காபாடி மஹால், உதய்புரி மஹால் மற்றும் ஜைனாபாதி மஹால் ஆகியோர் அவரது மனைவிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

பதர் உன் நிசா, பகதூர் ஷா நான், மெஹர் உன் நிசா, முஹம்மது அசாம் ஷா, முஹம்மது காம் பக்ஷ், சுல்தான் முஹம்மது அக்பர், ஜபாத் உன் நிசா, ஜெப் உன் நிசா, ஜினாத் உன் நிசா, ஜுபாத் அன் நிசா உள்ளிட்ட குழந்தைகள் அவர் வாரிசாக இருந்தனர்.

வீழ்ச்சி

ஒளரங்கசீப் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார். அவரது குழந்தைகள் சிலரே இடையில் இறந்து போயினர் ஆனால் ஒளரங்கசீப் 1707 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இறுதியாக 1707 பிப்ரவரி 20 அன்று அவர் இறந்தபோது அந்த கொடுங்கோல் ஆட்சியின் வீழ்ச்சியும் ஆரம்பமானது.

அவருக்கு பிறகு முகலாய அரசின் மன்னரான அவரது மகன் அசாம் ஷா மன்னராகி சிறிது காலங்களிலேயே கொல்லப்பட்டார். ஒளரங்கசீப்பின் மரணம் இந்தியாவின் புகழ்பெற்ற பேரரசான முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்தது.

17 ஆம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் இறந்து அடுத்த நூற்றாண்டான 18 ஆம் நூற்றாண்டின் இடையிலேயே இந்தியாவில் முகலாய அரசு அடியோடு அழிந்தது.

Main Image: Wikipedia

Other photos source : Google Images.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 396 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே