தங்கத்தைவிட விலையுயர்ந்ததாக கருதப்படுவது வைரம். அப்படி வைரம் என்ற சொல்லை கேட்கும்போது நமக்கு நினைவிற்கு வருவது கோஹினூர் வைரம்.
உலகின் பொக்கிஷங்களில் ஒன்றாக சொல்லப்படும் இந்த வைரம் தான் “உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்” என்று அறியப்படுகிறது.
கோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக ஒளி என்று பொருள்.
கோஹினூர் என்றாலே நினைவுக்கு வருவது வைரம் தான். ஆனால் நம்மில் பலர் அந்த வைரத்தின் வரலாறு பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
கோஹினூர் வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது. இந்த சண்டைகளுக்கு இடையில் இது சிறிது பாழாகிப் போனது என்று கூறப்படுகிறது.
இந்த கோஹினூர் வைரத்தை வைத்திருக்கும் அரசர்கள் அவர்களது மகுடத்தையும் ஆட்சியையும் இழப்பார்கள் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் சாபக் கேடு.
அதே போல, வரலாற்றில் கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர் என்பதே நிதர்சனம்.
இப்படி உலகிலுள்ள வைரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்கும் இந்த கோஹினூர் வைரத்தின் பிறப்பிடம் என்பது இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூரில் உள்ள கொல்லுர் சுரங்கம் தான். அங்கிருந்துதான் முதன்முதலில் கோஹினூர் வைரம் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோஹினூரின் பயணம்:
ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்து ஆரம்பமானது கோஹினூரின் சாப பயணம். பின்னர் இந்த வைரம் குவாலியர் மன்னர் விக்ரம் ஜித், மாமன்னர் பாபர், டெல்லியை ஆண்ட இப்ரஹாம் லோடி, பாபரின் மகனான ஹீமான்(அக்பரின் தந்தை) என பல கைகளுக்கு மாறி மாறி சென்றது.
5000 வருடம் பழமையானது என கூறப்படும் இந்த கோஹினூர் வைரம் டெல்லி சுல்தான் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து கை மாறி,கை மாறி, இறுதியாக 1526 ஆம் ஆண்டில் முதல் முகலாயப் பேரரசர் பாபர் கைகளுக்கு வந்தது என்று வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.
பின்னர் பாரசீக மன்னரான தாமஸ்ப் கைகளுக்கு சென்றடைந்து, பின்னர் நிஜாம் ஷாவை அடைந்து, மீண்டும் பாபர், அக்பர் பரம்பரையில் வந்து இன்றளவும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
1739 ல் டெல்லியை சூறையாடி நாதிர்ஷா எனும் பாரசீக மன்னன் கைப்பற்றினான்.(கோஹினூர் என்ற பெயரும் நாதிர்ஷாவால் தான் வந்தது) பின்னர் இவன் பரம்பரைகளை அலங்கரித்த கோஹினூர் வைரத்தை இந்தியாவிலுள்ள பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் ரஞ்சித்சிங் கைவசம் வந்தது.
மெல்ல மெல்ல நுழைந்து மொத்த இந்தியாவையும் தங்கள் கைவசம் கொண்டுவந்த ஆங்கிலேயர்களின் கீழ் பஞ்சாப் போன பின் கோஹினூர் வைரம் சர்.ஜான்.லாரன்ஸ் கைகளை சென்றடைந்த பின் பிரிடீஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்ததாக கூறப்படுகிறது. 1851 ஆம் ஆண்டில் லண்டனின் ஹைட் பார்க்கில் கிரேட் எக்ஸிபிஷன் நிகழ்ந்த போது பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு அந்த கோஹினூர் வைரத்தைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கோஹினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, அது அதற்கு நிலையான இடமாகவும் மாறி இன்று வரை கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வைரத்தை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச்சென்றதாக ஒரு தரப்பினரும் கூறினாலும், இது பிரிட்டிஷ் மன்னர் பரம்பரைக்கு பரிசாக வழங்கப்பட்டது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
சாபத்தின் சாத்தியக்கூறானது வைரத்தின் உரிமையைச் சார்ந்திருக்கும் என்று முந்தைய இந்து நூல், 1306ஆம் ஆண்டில் வைரத்தின் முதல் அங்கீகரிக்கப்பட்ட தோற்றமாகக் கூறியது.
அதில் “யார் இந்த வைரத்தை வைத்திருக்கின்றாரோ அவர் உலகை வெல்லலாம், ஆனால் அதன் துரதிஷ்டங்கள் அனைத்தும் வெளிப்படும். கடவுள் அல்லது பெண் மட்டுமே அதன் தீமையை விலக்கி அதனை அணிய முடியும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால்தான், பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா அல்லது ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக அவரது ஆபரணமாக அந்த வைரத்தை அணிந்தனர்.
ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரமானது எப்போதும் மகுடத்தை உடைய ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.