சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை.. சாலைகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் சிரமம்

சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அண்ணாசாலையை ஒட்டிய நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இடங்களிலும், ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, எழும்பூர் ஆகிய இடங்ளிலும் பலத்த மழை கொட்டியது.

சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இந்த நிலையில், அடைப்புகளை நீக்கி மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 413 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே