ரூ. 3,300 கோடிக்கு ஹவாலா ஊழல்

நாடு முழுவதும் 42 இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவில் ஹவாலா ஊழல் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, ஹைதராபாத், கோவா உட்பட 42 இடங்களில் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின்போது மிகப்பெரிய அளவில் ஹவாலா ஊழல் நடைபெற்றதிற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், மொத்தமாக நான்கு கோடியே 19 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியில் ஹவாலா ஊழல் நடந்திருப்பதாகவும், நிதியை பயன்படுத்தி ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் டெல்லி மும்பையில் உள்ளன என்றும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே