குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதன் முதல்நிலை தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வில் ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேரின் பதிவு எண்களை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வு ஒன்றும், நேர்முகத் தேர்வும் அடுத்து நடைபெறவுள்ளது.

மெயின் தேர்வு வருகிற மே மாதம் 28 – 30 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது தேர்ச்சிபெற்றவர்கள் அனைவரும் வருகிற 15, 16ஆம் தேதிகளுக்குள் அடுத்தகட்ட ஆவணங்களை இணையத்தில் அப்லோட் செய்யவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.

2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த இந்த தேர்வில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பங்குபெறவில்லை.

tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே