முகக்கவசம் அணியாதவர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது – தமிழக அரசு அரசாணை

மாஸ்க் அணியாமல் வாடிக்கையாளர்களை, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 30 வரை, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதில், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது

*கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும்

* கடை உரிமையாளர்கள், ஊழியர்கள்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். 

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே