மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் போதிய இட வசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளிப் உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் அனைத்து வயதினரிடையே உடற்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள 147 பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

பொது நிறுவனங்கள், தனியார் பங்களிப்பு மற்றும் உள்ளாட்சி நிதியை பயன்படுத்தி பூங்காக்களில் உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் உருவாக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் 120 சதுர மீ பரப்பளவுக்கு குறைவில்லாத இடத்தில் யோகா மையக் கட்டிடங்கள் கட்டவும், 100 சதுர மீ பரப்பளவுக்கு குறைவில்லாத இடங்களில் திறந்தவெளி உடற்பயிற்சி மையங்கள் அமைக்கவும் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் அமைப்பதன் மூலம் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பயனுள்ளதாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே