கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்படும் சூழலில் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பற்றாக் குறையை சீர் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நாளுக்கு சராசரியாக 50க்கு மேற்பட்ட டோஸ் கோவாக்சின் செலுத்தக்கூடிய மையங்களில் கோவாக்சின் வழங்கப்படும் என்றும் ஒரு நாளுக்கு சராசரியாக 100க்கு மேற்பட்ட டோஸ் வழங்கும் தனியார் தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று கூடுதலாக தமிழகத்துக்கு ஏழு லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தடுப்பூசி வருகை ஓரிரு நாட்கள் தாமதம் ஆகும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே