அரசு ஊழியர்கள் ஜூலை 1-க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் : தமிழிசை

அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. தற்பொழுது இது குறித்து பேசி உள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள், புதுச்சேரியில் நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட தொடங்கியுள்ளதால் தடுப்பூசி திருவிழா ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜூலை 1-ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை விரைவில் வர இல்லாதால் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் எனவும், பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்களுக்கு தற்பொழுது தயக்கம் குறைந்து வருவதாக கூறியுள்ள அவர், கொரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளதாகவும், யோகா கலையை கற்றுக் கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே