அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதற்கு அமெரிக்கா நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் காலியாக இருக்ககூடிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய விளக்கம் அளிக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக ஆசிரியர்களை உரியமுறையில் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க நிறுவனத்தோடு பள்ளிக்கல்வித்துறை இன்னும் ஒரு வார காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.