தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!! மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி..!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை அண்ணாநாகர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க போதுமான வசதி இல்லாததால், அண்ணாநாகர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும்; இன்னும் இரு நாட்களில் அதற்கான பணி தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் சிஎஸ்ஆர் நிதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், இந்த ஆக்ஸிஜன் மையம் நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது எனவும் இதனால் 20 நோயாளிகள் வரை ஆக்ஸிஜன் பயன்பதலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் தினசரி கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கபட உள்ளதாகவும் இதனால் நோயாளிகள் பயன்பெறுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வசதி இல்லை என்றும் ஆக்ஸிஜன் இருப்பு வைக்க மட்டுமே வசதி இருந்ததாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே