சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த இரண்டு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.183 குறைந்து, ரூ.4,680 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.65,400 ஆகவும் உள்ளது.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்…………………….. 4,680

1 சவரன் தங்கம்………………………….37,440

1 கிராம் வெள்ளி………………………..65.40

1 கிலோ வெள்ளி………………………..65,400

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்……………………….. 4,863

1 சவரன் தங்கம்…………………………. 38,904

1 கிராம் வெள்ளி……………………….. 65.80

1 கிலோ வெள்ளி……………………….. 65,800


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே