குருத்துவாராவுக்குச் சென்று பிரதமர் மோடி மரியாதை..!!

தில்லியில் உள்ள ரகப்கஞ்ச் சாகிப் குருத்வாரா பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தி சீக்கிய முறைப்படி வழிபாடு நடத்தினார்.

குரு தேஜ் பகதூருக்கு நேற்று (சனிக்கிழமை) நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குருத்வாரா சென்ற பிரதமர் மோடி, அங்கு குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்.

குருத்வாராவிற்கு மோடி சென்றபோது, உடன் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்து செல்லவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவித தடுப்புகளும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த புகைப்படங்களை தமது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அதில் மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”இன்று காலை, ஸ்ரீகுரு தேஜ் பகதூர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினேன்.

ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் அன்பில் ஈர்க்கப்பட்ட லட்சகணக்கானோரில் நானும் ஒருவன்” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே