நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்த உதவி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஜெர்மனி நிராகரித்து விட்டது.

பாகிஸ்தான் தனது நீர்மூழ்கி கப்பல்களை, அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தரம் உயர்த்த முயற்சி செய்து வருகிறது.

வழக்கமாக நீர்மூழ்கி கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள் வந்தாலும், இரண்டு நாளுக்கு ஒரு முறை கடல் பரப்புகக்கு மேல் வர வேண்டும்.

அவ்வாறு, கடல் பரப்புக்கு மேலே வராமல் சமாளிப்பதற்கு என ஏர் இன்டிபென்டன்ட் புரோபுல்ஷன் (ஏஐபி)என்ற தொழில்நுட்பம் உள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம், நீர்மூழ்கி கப்பல்கள் வாரக்கணக்கில், கடலின் பரப்புக்கு வராமல் , மறைந்திருந்து தாக்க முடியும். தப்பிவிட முடியும்.

இதனால், ஏஐபி தொழில்நுட்பத்தை தங்களுக்கு தரும்படி, ஜெர்மனியிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது.

இது தொடர்பாக ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான பாதுகாப்பு குழு ஆலோசித்தது.

முடிவில், ஏஐபி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்க மறுத்துவிட்டது.

இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்திய கடற்படைக்கு என, சொந்தமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஐபி தொழில்நுட்பம் உள்ளது.

இதனை நேவல் மெட்டிரியல் ஆராய்ச்சி ஆய்வகம்(என்எம்ஆர்எல்) உருவாக்கியுள்ளது.

ஏஐபி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்க ஜெர்மனி மறுத்ததன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஜெர்மனி தூதரகத்தில் ஹக்கானி பயங்கரவாதிகள் டிரக் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் 150 பேர் உயிரிழந்ததனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களை தண்டிக்க பாகிஸ்தான் தவறி விட்டதால், ஏஐபி தொழில்நுட்பத்தை வழங்க ஜெர்மனி மறுத்துவிட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே