10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ளலாம் – உள்துறை அமைச்சகம்

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 4வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநலங்களிலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன.

ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

மாநிலங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில், ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது.

ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டத்ற்கும் தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுகளின் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்வு பணியாளர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

அனைத்து தேர்வு மையங்களிலும் கைகளை சுத்தம்செய்யும் கிருமிநாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு தேர்வு மையத்திற்கு வந்து செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே