ரேஷனில் வரும் 15 ஆம் தேதி முதல்.. – முதல்வர் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்பு..!!

தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், 2 கோடி 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற உடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியுள்ளார். அதன்படி, அட்டை குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா நிதியுதவிக்கான டோக்கன் விநியோகம் தொடங்கிய நிலையில் 15 ஆம் தேதி முதல் ரேஷனில் 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே