மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84.

பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். 

அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது முதல் அவா் கோமாவில் இருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது.

அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே