ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..!

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்.

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் (59). மொத்தம் 59 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்.

1986, செப். 18-22, சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய டெஸ்ட் ‘டை’ ஆனது.

இதில் 210 ரன் எடுத்து அசத்தினார். 1987ல் உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார். 1997-98ல் ஓய்வு பெற்றார்.

பின் வர்ணனையாளராக பணியாற்றினார். ஐ.பி.எல்., தொடருக்காக மும்பை வந்தார்.

தெற்கு மும்பையில் உள்ள டிரிடென்ட் ஓட்டலில் தங்கி, கடந்த 15 நாட்களாக பணிகளில் ஈடுபட்டார். இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் இவர் மரணம் அடைந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே