#BREAKING : #LIVE : 3 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 11 முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வெளியிடுகிறார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் வெளியிடவிருக்கும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு சார்ந்தவை என்று தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 3 திட்டங்கள், விவசாயத் துறைக்கான அரசின் திட்ட முறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தவையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன!

பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி – 3 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்து வருகிறார்.

வேளாண்துறை சார்ந்த 11 நிவாரண திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

வேளாண்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை.

வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

ஊரடங்கு காலத்தில் பாலின் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டது.

ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.18,700 கோடி நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு;

ரூ.1 லட்சம் கோடி நிதி உடனடியாக வங்களில் செலுத்தப்படும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஊரடங்கு காலத்தில் 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு; மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு!

குறு உணவு உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!

குளிர் சாதன கிடங்குகளில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக நிதி ஒதுக்கீடு!

பிராந்திய வேளாண் பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மீன் ஏற்றுமதி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்!

கூடுதலாக 70 லட்சம் மீன் உற்பத்தியை எட்ட அரசு இலக்கு!

கால்நடை நோய்த் தடுப்பு சிகிச்சைக்காக ரூ.13,343 கோடி ஒதுக்கீடு;

53 கோடி கால்நடைகளுக்கு 100% தடுப்பூசியை உறுதி செய்ய நடவடிக்கை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மூலிகை பொருட்கள் உற்பத்திக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும்! – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்! – மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன்

தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்து, பருப்பு, வெங்காயம், உருளை மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

ஆன்லைன் மூலம் வேளாண் பொருள் விற்பனை செய்ய திட்டம் வகுக்கப்படும்

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே