#LIVE : #JUSTIN : பிரதமர் அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் 4-ம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார்.

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் இன்று நான்காவது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்.

புது தில்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவை பொருளாதார ரீதியாக தற்சார்பு இந்தியாவாக மாற்றுவது மிகவும் முக்கியம்.

தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தங்கள் தேவை.

நிறைய துறைகளில் வழிமுறைகள் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும்.

பிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தற்சார்பு இந்தியா என்று சொல்லும் போது, அது இந்தியாவை தனிமைப்படுத்தும் கொள்கையாக இருக்காது, மாறாக, இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையை பலப்படுத்துவது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 8 துறைகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும்; கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முதலீடுகளை ஈர்க்கும் திறனை கொண்டு மாநிலங்கள் தர வரிசைபடுத்தப்படும். தொழில் பூங்கா உருவாக்க 5 லட்சம் ஹெக்டேர் காலியிடம் கையிருப்பில் உள்ளது.

நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளை கட்டமைப்பை வலுப்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிலக்கரி துறையில் தனியார் துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.

நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக் கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

பகுதி அளவு நிலக்கரி சுரங்கங்களுக்கு இனி ஏலம் விடப்படும். 500 கனிம வளச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும்.

முதற்கட்டமாக 50 நிலக்கடி சுரங்கங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும்.

ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. சுரங்கத்துறையை மேம்படுத்த தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

அலுமினியத் துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும்.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படாது.

அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஏலத்துக்கு கொடுக்கப்படும்.

கனிமவளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்து செலவீனங்களை ரூ.1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை.

தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே