கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!!

கொரோனா தடுப்பூசி போடும் மெகா இயக்கம் தொடங்கும் நிலையில் என்னவெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது, இதைபோட்டு கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று நாடு முழுவதும் மெகா தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்குகிறது.

தடுப்பூசி போடும் மையம், உடல் தகுதி, டோஸ்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கேயேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி விதிகள் புத்தகத்தில் இடம்பெற்றவை பின்வருமாறு:

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஒரு டோஸ் ரூ 200 முதல் ரூ 295க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக 1.65 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மருந்துகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத் துறை பணியாளர்களின் டேட்டாபேஸின் படி அனுப்பப்பட்டுள்ளன.

18 வயதுக்குள் கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக் கூடாது. இரு டோஸ்களுக்கும் ஒரே நிறுவன தடுப்பு மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு ஊசி போடும் இடத்தில் வீக்கம், வலி, தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்த்தல், சளி பிடித்தல், இருமல், மயக்கம், தலை சுற்றல் , படபடப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதற்காக தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராசிட்டாமல் மாத்திரையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கொரோனா ஊசி போடப்படாது.

கர்ப்பம் தரிப்போம் என்ற சந்தேகத்தில் இருப்போருக்கும் தடுப்பூசி போடப்படாது. ரத்த போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு எச்சரிக்கையுடன் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.

கோவின் செயலி மூலம் பதிவு செய்தோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். இன்னும் ஒரு மாதத்தில் கோவின் செயலி அனைவரின் செயல்பாட்டுக்கும் வந்துவிடும்.

கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு கொரோனாவிலிருந்து மீண்டவுடன் 4 முதல் 8 வாரங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஒத்தி வைக்கப்பட வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே