ஜனவரி 1 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் FASTags கட்டாயம் – மத்திய அரசு

இந்தியாவில் பல எதிர்ப்புகள் மத்தியில் பாஸ்டேக் மூலம் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஜனவரி 1 முதல் தற்போது இருக்கும் விதிமுறைகளைக் கீவ் பழைய வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் புதிய வாகனங்களுடன் பழைய வாகனங்களையும் சேர்த்து அனைத்து 4 சக்கர வாகனங்களுக்குப் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கட்டணங்களை டிஜிட்டல் மற்றும் ஐடி சேவை மூலம் பேமெண்ட்களை மேம்படுத்துவதற்காகப் பாஸ்டேக் மூலம் பேமெண்ட்-ஐ அதிகரிக்க முடிவு செய்து மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே