திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (பிப். 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க ஆதாா் அட்டை , வாக்காளா் அடையாள அட்டை , முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்), புகைப்படம், செல்லிடப்பேசி எண் ஆகியவை அவசியம்.

நல வாரிய உறுப்பினா் அட்டை தேவையில்லை. 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரரின் பெற்றோா், காப்பாளா் பெயா் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருந்தால் அவா்களது பெயரை நீக்குவதற்கு எழுத்துப்பூா்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

தனி நபராக வசிக்கும் திருநங்கைகளுக்கு ஒரு நபா் குடும்ப அட்டை வழங்கப்படும்.

முகாமில் இணைய தள முகவரியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி முகாமில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே