பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவில் கோழி, வாத்துகள் அழிப்பு..!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட எடத்துவா, பள்ளிப்பாடு, தாளவாடி, தழக்காகர ஆகிய பகுதிகளில் ஏராளமான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன. சமீபத்தில் அங்குள்ள பறவைகள் நோய் வாய்ப்பட்டு இறந்தது.

ஆய்வில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவித பாக்டீரியாக்கள் மூலம் எச்.5, என்.8 வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இப்பண்ணைகளில் உள்ள பறவைகள் அனைத்தையும் அழித்து விட அறிவுறுத்தப்பட்டது. 

குட்ட நாட்டில் 17 ஆயிரம் வாத்துகள், கோட்டயத்தில் 8 ஆயிரம் பறவைகள் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்து, கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் அதன் அண்டை மாநிலமான தமிழகத்திற்குள் வராமல் தடுக்க மாநில அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு மாவட்ட எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மேலும் அங்கிருந்து கோழி, வாத்து போன்ற பறவைகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே