தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், இ-பாஸ் முறையில் தளர்வுகள் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன்.

எளிய மக்களுக்கு அதற்கு விண்ணப்பிப்பதற்கே அதிக சிரமம் உள்ளது. எனவே இப்போதும் அம்முறையை முழுமையாக அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன்.

அதேநேரத்தில் இத்தளர்வை மிக மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி கவனமாக இருக்க வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே