தமிழகம் நுழைபவர்கள் இனி இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதுமே கொரோனா இரண்டாவது அலை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
பொதுமக்கள், கொரோனா குறித்து பயமில்லாமல் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வெளியில் சென்று வருகின்றனர்.
இன்னும் சிறிது நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு இனி ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களைத் தவிர்த்து வேறு எந்த மாநிலங்களில் இருந்து வந்தாலும், தமிழகத்திற்கு நுழைபவர்கள் கட்டாயமாக இ – பாஸ் கேட்டு விண்ணப்பித்தே வரவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.