மனச்சோர்வால் மனசு மட்டுந்தான் பாதிக்குமா? உங்க உடம்புல என்னென்ன மாற்றம் நடக்கும்னு தெரியுமா?

மன அழுத்தம் மனதை மட்டும் பாதிப்பதில்லை நம்முடைய உடல் நலத்தையும் சேர்த்து பாதிக்கிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மன அழுத்தத்தால் ஹார்மோன் பிரச்சனைகள் முதல் இதய பிரச்சனைகள் வரை சந்திக்க நேரிடும். இன்னும் மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வோம்…
மனச்சோர்வு என்பது மனநிலை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அதன் தாக்கம் உடலிலும் தெரியும் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். மனச்சோர்வு நம் மனநிலையை தாக்கி எதையும் சிந்திக்க விடாமல் கவலையில் மூழ்கடித்து விடும். அது மட்டுமல்லாமல், பெரிய மனச்சோர்வு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து உங்கள் இதயம் வரை உங்கள் உடலின் செயல்பாட்டை அழிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா.
ஆம். மனச்சோர்வால் நாம் அடையும் தீமைகள் ஏராளம். உண்மையில் மனச்சோர்வு உங்க உடலை எவ்வாறு பாதிக்கிறது வாங்க தெரிஞ்சுக்கலாம்.
​உடலில் அழற்சியை உண்டாக்கும்
உண்மையில் நடப்பு நோய்த்தடுப்பு ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டு ஆய்வின் படி நீண்டகால மன அழுத்தம் ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் அட்ரீனல் சுரப்பிகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் தொடர்ச்சியான மாற்றங்களைத் தருகிறது. இதனால் தான் நம் மனதில் மனச்சோர்வு மற்றும் பதட்டம் உண்டாகிறது.

நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இரண்டும் உடலில் அழற்சியை ஏற்படுத்துவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல விஞ்ஞானிகள் நாள்பட்ட அழற்சி மனச்சோர்வால் தான் ஏற்படுகிறதா என்பதை மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.

​உடல் எடையில் மாற்றத்தை உண்டாக்கும்
மனச்சோர்வின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று பசியில் மாற்றங்கள் ஏற்படும் . மனச்சோர்வு உள்ளவர்கள் மிகக் குறைவாக சாப்பிடலாம் அல்லது அதிகமாக சாப்பிடலாம். இதன் காரணமாக, அவர்கள் எடையில் திடீர் ஏற்ற இறக்கங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். இது இதயத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும், கருவுறுதலை பாதிக்கும், மற்றும் பிற உடல்நல நோய்களுக்கு ஏராளமான பாதிப்புகளை கொடுக்கும் .

​இதயத்திற்கு மோசமானது
நீங்கள் தொடர்ந்து மனச்சோர்வில் இருக்கும் போது உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை உண்டாக்குகிறது. இது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கிறது. இவையனைத்தும் பாதிக்கப்படும் போது இருதய பாதிப்புக்கான ஆபத்துக்கள் அதிகம்.

​பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது
மனச்சோர்வு உடையவர்களின் பாலியல் வாழ்க்கை ஆர்வம் இன்றி காணப்படும். அவர்கள் எளிதாக புணர்ச்சியை அடைய மாட்டார்கள். ஆனால் எப்படி மனச்சோர்வு ஆண்மையை பாதிக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை.

​சீரண மண்டலத்தையும் பாதிக்கிறது
உங்கள் வயிறு மற்றும் குடலின் செயல்பாட்டில் உங்கள் மூளைக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. பதட்டமாக இருக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணமாக இதுவே இருக்கலாம்.

ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கில் ஒரு கட்டுரையின் படி, உங்கள் மூளை மன உளைச்சலுக்கு ஆளாகும்போது எப்படி மன அழுத்தம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறதோ அதைப்போல உங்கள் குடல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பக்கூடும், இதனால் வயிற்று வலி ஏற்படுகிறது.

எனவே மனச்சோர்வு நம் மூளையில் பிரதிபலிப்பதால் நம் உடலையும் சேர்த்து பாதிக்கிறது. எனவே மனச்சோர்வின் அறிகுறிகளை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக உளவியல் நிபுணர்களின் அறிவுரைகளை பெறுவது நல்லது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே