இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு..!!

இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து போண்டியானோக் பகுதிக்கு 62 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் பறக்க தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது.

அந்த விமானம் ஃபோண்டியானாக் பகுதி அருகே சென்ற போது விமானத்துடன் தரைக்கட்டுபாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், காணாமல் போன பயணிகளின் ஸ்ரீவிஜயா ஏர் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோவை மீட்புக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணியில் குழுவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே