#BREAKING : கோழிக்கோடு விமான விபத்து : உயிரிழப்பு 16 ஆக உயர்வு!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்ந்தது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணிக்கு விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஓடுதளத்திலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் விமானத்தின் பாகங்கள் இரண்டு துண்டுகளாக உடைந்தன

கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்கிடையே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் கோழிக்கோடிற்கு விரைந்துள்ளனர்.

கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், விமானம் ஓடுதளம் முழுமைக்கும் சென்று வழுக்கி விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கி விமானி, பயணிகள் என 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே