55 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு ..!!

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இதனை ஏற்று காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 55 பேரை பணியிட மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை காவல்துறை தலைவர் திரிபாதி வியாழக்கிழமை வெளியிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே