கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடையால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது.

கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால், புத்தாண்டு தினத்தன்று காணப்படும் மெரினா இந்தாண்டு வெறிசோடியது. நகர் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தடையை மீறி பொதுவெளியில் கொண்டாட முயன்றவர்களை அவர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால், முக்கிய இடங்கள் அனைத்தும் ஆள் அரவமின்றி காட்சியளித்தன. 

உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்பட அனைத்து இடங்களும் மக்கள் கூட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.

அரசின் தடைக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம் மாநகர் முழுவதும் தடையை மீறி இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

சாலை தடுப்புகள் அமைத்து அவர்கள் கண்காணித்தனர். மதுபோதையில் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே