மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17-ம் தேதி லடாக் பகுதிக்குச் செல்கிறார்.
கிழக்கு லடாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி உள்ள இந்தியா -சீனா இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் சுமார் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த மோதலுக்கு பின்னர் முதல் முறையாக லடாக் எல்லையை பார்வையிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவுள்ளதாக இரண்டு வாரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டது.
அவருடன் ராணுவ தலைமை தளபதி நரவ்னேவும் உடன் செல்வதாக இருந்தது. ஆனால், பின்னர் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோர் வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி லடாக்கிற்கும்; ஜூலை 18 ஆம் தேதி அன்று ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.