தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8,000ஐ நெருங்கியது..!! இன்றைய பாதிப்பு நிலவரம்..!!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,62,935 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 2,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,999 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 4,176 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 8,91,839 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 95,387 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,08,79,495 ஆக உள்ளது.

மேலும், தற்போது 58,097பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே